கமல் முதல் பா.ரஞ்சித் வரை - ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா ஆல்பம்
Published on : 01 Jun 2023 20:23 pm
1 / 39
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் கலந்துகொண்டுள்ளார்.
2 / 39
விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “நான் எந்த படம் எடுத்தாலும் அதில் சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக இடம்பெறும். ‘மாமன்னன்’ வெளியான பிறகு பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். புதிய வடிவேலுவை இந்தப்படத்தில் எல்லோரும் பார்ப்பார்கள்” என்றார்.
3 / 39
விழா தொடங்குவதற்கு முன் நடிகர் வடிவேலு கூறும்போது, “நான் எங்கும் செல்லவில்லை. எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோனில் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு கேப்-பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ்களால் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
4 / 39
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளை நான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எல்லோரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் கதை. அருமையான கதையை உதயநிதி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன்.
5 / 39
நான் பாடவில்லை, அவர் தான் என்னை பாட வைத்துள்ளார். மறைந்த என் தாயை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம். படம் வெற்றி பெறும். ‘தேவர் மகன்’ படத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய படம் இது. அரசியல் படம் இது. புதுமையான படம் இது. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் எனக்கு இதில் அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார். தற்போது அரசியலில் ஹீரோவாகப் போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்” என்றார்.
6 / 39
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.
7 / 39
கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி.
8 / 39
நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன்” என்றார்.
9 / 39
10 / 39
11 / 39
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
17 / 39
18 / 39
19 / 39
20 / 39
21 / 39
22 / 39
23 / 39
24 / 39
25 / 39
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
37 / 39
38 / 39
39 / 39