Published on : 26 Jul 2024 17:32 pm

நடராஜர் சிலைகளுக்காவே தஞ்சையில் ஓர் அருங்காட்சியகம்! - போட்டோ ஸ்டோரி

Published on : 26 Jul 2024 17:32 pm

1 / 23

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடராஜர் சிலைகளுக்கென பிரத்யேக அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. | தகவல்: வி.சுந்தர்ராஜ் | படங்கள்: ஆர் வெங்கடேஷ். 
 

2 / 23

தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கோயிலின் அழகையும், அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்களையும் கண்டு வியந்து செல்கின்றனர்.
 

3 / 23

அதேபோல, தஞ்சாவூரில் சோழர்களைத் தொடர்ந்து, நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சிபுரிந்த அரண்மனை இன்றளவும் பாதுகாக்கப்பட்ட பெட்டகமாக திகழ்ந்து வருகிறது.  தஞ்சாவூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அரண்மனை வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், ஆயுத கோபுரம், மணிக்கோபுரம், தர்பார் மஹால், சார்ஜா மாடி ஆகிய கட்டிடங்களையும் பார்வையிட்டு செல்கின்றனர். 

4 / 23

இந்த அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இதுவரை ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள் பாதுகாக்கப்படுவதுடன், பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

5 / 23

இந்நிலையில், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளில், நடராஜர் சிலைகளை மட்டும் கொண்டு பிரத்யேக அருங்காட்சியகம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
 

6 / 23

அதன்படி, இங்கு 2 அடி முதல் 5 அடி வரையிலான 15 நடராஜர் சிலைகள், 13 சிவகாமி அம்மன் சிலைகளை கொண்டு, உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் 10, 11, 12-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவைகளாகும். 

7 / 23

இந்த அருங்காட்சியகத்தில் அலங்கார மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, ஒவ்வொரு சிலைக்கு அருகிலும் அந்த சிலை குறித்து சிறிய அளவிலான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

8 / 23

மேலும், அதில் உள்ள கியூ ஆர் கோடுகளை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சிலை எந்த காலத்தைச் சேர்ந்தது. எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

9 / 23

இதுகுறித்து கலைக்கூடப் பணியாளர்கள் கூறும்போது. "இங்குள்ள கலைக்கூடத்தில் பாரம்பரியமிக்க பல்வேறு கைவினைப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகளவிலான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது ரூ.50 லட்சம் செலவில் நடராஜர் சிலைகளின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
 

10 / 23
11 / 23
12 / 23
13 / 23
14 / 23
15 / 23
16 / 23
17 / 23
18 / 23
19 / 23
20 / 23
21 / 23
22 / 23
23 / 23

Recently Added

More From This Category

x