Published on : 09 Jul 2024 19:49 pm

மாஸ்கோவில் பிரதமர் மோடி - போட்டோ ஸ்டோரி

Published on : 09 Jul 2024 19:49 pm

1 / 22
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
2 / 22
தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புதினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.
3 / 22
இந்தச் சந்திப்பின்போது புதினிடம் பேசிய பிரதமர் மோடி, "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என்றார்.
4 / 22
“போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டு வர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது” என்று புதினிடம் மோடி கூறினார்.
5 / 22
“வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்" என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
6 / 22
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கண்காட்சி மையத்தை பார்வையிட்டனர்.
7 / 22
8 / 22
இந்த அரங்கில் இந்திய மற்றும் ரஷ்ய மாணவர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினருக்கும், பூமிக்கும் பயனளிக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அவர்களைப் பிரதமர் ஊக்குவித்தார்.
9 / 22
10 / 22
11 / 22
12 / 22
13 / 22
மாஸ்கோவில் உள்ள அறியப்படாத வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அங்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.
14 / 22
அறியப்படாத வீரர்களின் நினைவிடம் என்பது மாஸ்கோவின் கிரெம்ளின் சுவரில் அமைந்துள்ள ஒரு போர் நினைவுச் சின்னமாகும். இது இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்த சோவியத் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
15 / 22
16 / 22
17 / 22
ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவரை அங்கிருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.
18 / 22
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அன்பான வரவேற்புக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
19 / 22
தமது மூன்றாவது பதவிக் காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாறுவதே அரசின் நோக்கமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
20 / 22
21 / 22
22 / 22

Recently Added

More From This Category

x