Published on : 08 Jul 2024 19:30 pm

கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை | போட்டோ ஸ்டோரி

Published on : 08 Jul 2024 19:30 pm

1 / 26
மும்பையில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரில் இன்று (திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | படங்கள்: இம்மானுவல் யோகினி
2 / 26
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
3 / 26
அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது.
4 / 26
இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 / 26
புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
6 / 26
இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10 ஆம் தேதி வரை மழை தொடரவே செய்யும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று (ஜூலை 8) கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 / 26
மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8 / 26
புறநகர் ரயில் சேவைகள், விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
9 / 26
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை மும்பையில் கனமழை நிலவரம் குறித்து மந்த்ராலயாவில் கூட்டத்தை நடத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
10 / 26
இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்துள்ளது. இதனால், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
11 / 26
முனிசிபல் கார்ப்பரேஷனின் 461 மோட்டார் பம்புகளும், ரயில்வேயின் 200 பம்புகளும் இயங்குகின்றன. காலையில் இருந்து அனைத்து துறைகளுடன் தொடர்பு கொண்டேன்.
12 / 26
மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தேன். கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
13 / 26
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க இன்று நடைபெறவிருந்த அனைத்துக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் அறிவித்துள்ளார்.
14 / 26
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
26 / 26

Recently Added

More From This Category

x